விக்ரம் – ராஜன் – சங்கு வெற்றிக் கிண்ணம்  

Saturday, February 3rd, 2018

கொக்குவில் வளர்மதி விளையாட்டுக்கழகம்  விக்ரம் -ராஜன் -சங்கு வெற்றிக்கிண்ணத்துக்காக வருடம் தோறும் நடத்தும்  மட்டுப்படத்தப்பட்ட ஒவர் கிரிக்கெட் சுற்றுப்போட்டி நாளை காலை கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகின்றது

இந்தச் சுற்றுப்போட்டியில் வருடம் தோறும் கொக்குவில் மத்திய சனசமூக அணி,ஜொலிஸ்ரார் அணி, யாழ்.பல்கலைகலை அணி ஆகியவையும் நான்காவது அழைக்கப்பட்ட அணி ஒன்று பங்குபற்றுவது வழமை

இம்முறை வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணி அழைக்கப்பட்ட அணியாக இச் சுற்றுப்போட்டியில் பங்கு பற்றுகின்றது

முதல் சுற்று லீக் முறையில் 30 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட ஆட்டங்களாக அமையும்

 பங்குபற்றும் நான்கு அணிகளும் லீக் முறையில் தலா மூன்று கட்டங்களாக மோதும் அதில் தேர்வாகும் முதலிரண்டு அணிகளும் அறுதிப்போட்டியில் பங்குபற்றும்

இறுதியாட்டம் 40மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்டதாக அமையும்   நாளை ஆட்டத்தில் காலை 8.30 மணிக்கு ஜொலி ஸ்ரார் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து யாழ்.பல்கலை அணி மோதும்

பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கே.ஸி.ஸி அணியை எதிர்த்து ஓல்ட் கோல்ட்ஸ் அணி விளையாடும்

கடந்த வருடச்சுற்றுப்போட்டியில் கே.ஸி.ஸி.ஸி அணி வெற்றிக் கிண்ணதை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது

Related posts: