விக்கெட் இழப்பின்றி இலங்கை  அணி அபார வெற்றி!

Sunday, March 5th, 2017

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக இலங்கை ஏ அணி 2 ஆவது போட்டியில்  டக்வர்த் லூவிஸ் முறைப்படி 119 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 42.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து வெறும் 217 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது.இதில் இங்கிலாந்து அணி சார்பில் லிவிங்ஸ்டன் அதிகபட்சமாக 94 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

சிறந்த முறையில் பந்துவீசிய இலங்கை அணியின் மெலிந்த சிறிவர்தன 40 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

எனவே 218 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பமே அசத்தலான ஆட்டத்தினை வெளிக்காட்டியது 28.4ஓவர்களில் 201 ஓட்டங்களை பெற்றிருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டு, டக்வர்த் லூவிஸ் முறைப்படி இலங்கை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதில் என்ன சுவாரஷ்யம் எனில் இலங்கை அணி எந்தவொரு விக்கட்களையும் இங்கிலாந்து அணி கைப்பற்றவில்லை.

இலங்கை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய குசல் பெரேரா 70 ஓட்டங்களையும், குணதிலக 88 பந்துகளுக்கு 6 ஆறு ஓட்டங்கள் மற்றும் 12 நான்கு ஓட்டங்கள் உட்பட 121 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக்கொண்டார். மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 2- 0 என்ற அடிப்படையில் முன்னிலைவகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: