வாய்ப்பை நழுவவிட்டது இந்தியா!

New_Layout__1_ Sunday, March 11th, 2018

“சுல்தான் அஸ்லான் ஷா” கிண்ணத்துக்கான ஹொக்கி தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இந்தியா தவறவிட்டது.

மலேசியாவில் நடைபெற்றுவரும் இந்தத் தொடரில் அயர்லாந்து மற்றும் இந்தியா அணிகள் நேற்று மோதின.

அந்தவகையில் முதல் இரண்டு ஆட்டத்தில் முன்னிலை வகித்த இந்தியா அடுத்த ஆட்டத்தில் 3 : 2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

அதேவேளை அவுஸ்திரேலியா அணி அயர்லாந்தை தோற்கடிக்கும் பட்சத்திலும், இங்கிலாந்து மற்றும் மலேசியா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடையும் பட்சத்திலும் இந்தியா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் நிலை காணப்பட்டது.

எனினும் அயர்லாந்துடனான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பினை இழந்துள்ளமை குறிப்படத்தக்கது.