வாய்ப்புக்கிடைத்தால் துடுப்பாட்டுப்போடும் வாப்புகிடைக்காட்டால் தண்ணீர் போத்தலோடும்_டீவிலியர்ஸ்

Saturday, December 30th, 2017

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள வீரர்களை தெரிவுசெய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க அணியின் ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

சிம்பாவே அணிக்கான போட்டியில் தலைமையேற்று வெற்றி பெற்றதன் பின்னர்,இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். இவர் குறிப்பிடும்போது, “உபாதையிலிருந்த மோர்கல், ஸ்டெயின் மற்றும் டு பிளசிஸ் ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர். இதனால் விளையாடும் 11 பேரை எவ்வாறு தெரிவுசெய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. கடைசி 11 வீரர்களை தெரிவு செய்வதில் சிக்கல் நிலவுகின்றது. வாய்ப்பு கிடைக்குமானால் 4வது துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளேன் எனவும். வாய்ப்பு கிடைக்காவிடின் விளையாடும் வீரர்களுக்கு தண்ணீர்ப் போத்தல்கள் எடுத்துக்கொண்டு கொடுப்பேன்” எனவும் மகிழ்ச்சியோடு தெர்வித்துள்ளார்.

Related posts: