வாதரவத்தை விக்னேஸ்வரா துடுப்பாட்டத்தில் வாகை சூடியது!!

Thursday, March 15th, 2018

யாழ்ப்பாணக் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் புத்தூர் வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலய அணி சம்பியனானது.

கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் புத்தூர் வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலய அணியை எதிர்த்து உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலய அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலய அணி நிர்ணயிக்கப்பட்ட 6 பந்துப் பரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து 33 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக நிகாசினி 20 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் நிலானி, சர்விகா இருவரும் தலா இரண்டு இலக்குகளையும் ஜதீசனா, ஜீவிகா இருவரும் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய புத்தூர் வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலய அணி 4.3 பந்துப் பரிமாற்றங்களில் 3 இலக்குகளை மாத்திரம் இழந்து 36 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது. அதிகபட்சமாக கஜனி 13 ஓட்டங்களைப் பெற்றார்.

Related posts: