வாகை சூடினார் சாய்னா நேவால்!

மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் வென்று இந்திய வீராங்கனை சாய்னா நேவால் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டார்.
Sibuவில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், தாய்லாந்து வீராங்கனை Pornpawee Chochuwongவுடன் மோதினார்.
விறுவிறுப்பான நடந்து ஆட்டத்தின் முடிவில் சாய்னா 22-20, 22-20 என்ற செட் கணக்கில் 19 வயது தாய்லாந்து வீராங்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.இந்தியாவின் பேட்மிண்டன் நட்சத்திரமாக திகழும் சாய்னா கடைசியாக 2016 யூன் மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது நினைவுக் கூரதக்கது.
முழங்கால் காயத்திலிருந்து தற்போது திரும்பியுள்ள சாய்னா, பங்கேற்ற முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
|
|