வல்வை. வி.கழக உதைபந்தாட்டம் ரேவடி ஜக்கிய இளைஞர் சம்பியன்!

Wednesday, October 12th, 2016

வல்வை விளையாட்டுக்கழகத்தினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில் முத்துக்குமாரு மற்றும் அம்பிகை அம்மா ஆகியோரின் ஞாபகார்த்தமாக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த சனிக்கிழமை வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் மோதியது. இவ்வாட்டத்தில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

வல்வை ரேலடி ஜக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இவ்வாட்டத்தில் வல்லை ரேவடி ஜக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை ரேவடி ஜக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது.

இவ்வாட்டத்தில் 5:2 என்ற கோல் கணக்கில் வல்லை ரேவடி வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது.  உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் தொடர் நாயகன் சீலன் ரேவடி ஜக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம், ஆட்ட நாயகன் கபில்ராஜ் இளங்கதிர் விளையாட்டுக்கழகம் சிறந்த கோல்காப்பாளர் பிரேம்ராஜ் ரேவடி ஜக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம். உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் பிரதம விருந்தினராக யு.ளு இராஜேந்திர(பேராசிரியர்) சிறப்பு விருந்தினர்களாக ஆ.வேதாபரணம் (தலைவர் – வடமாராட்சி உதைபந்தாட்ட லீக்), யு.ஆரளுர்நந்த சோதி கலந்து சிறப்பித்தனர்.

Untitled-1 copy

Untitled- copy

Related posts: