வலைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கான சங்கத்தை நிறுவ நடவடிக்கை!

Friday, January 20th, 2017

நாட்டில் வலைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்கள் சங்கமொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலைப்பந்தாட்டச் சங்கத்தின் தலைவர் திருமதி யசா ராமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கூட்டம் எதிர்வரும் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு டொரிங்டனிலுள்ள விளையாட்டு கல்வி நிலையத்தில் நடைபெறவுள்ளது.இதில் அனைத்து தரத்தையும் சேர்ந்த வலைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்கள் பங்கேற்க முடியுமென்று இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பு நடவடிக்கைகள் இம்மாதம் 22ம் திகதி நாவலப்பிட்டியில் ஆரம்பமாகும்.

இந்த வீரர்களுக்கு நீண்டகாலப் பயிற்சியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன் மே மாதம் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய கனிஷ்டி வலைப்பந்தாட்டப் போட்டியையும் ஜுலை மாதத்தில் பொஸ்வானாவில் நடைபெறவுள்ள உலக சம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியையும் இலக்காகக் கொண்டு இந்த பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2c2705db5579fa57c8e334ea6082b480_XL

Related posts: