வலைப்பந்தாட்டத் தொடர் யூனியன் மகுடம் சூடியது!

Wednesday, April 25th, 2018

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத் தொடரில் 20 வயது பெண்கள் பிரிவில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.

வேம்படி மகளிர் கல்லூரியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி மோதியது.

நான்கு கால் பாதிகளைக் கொண்டதாக ஆட்டம் அமைந்தது. முறையே 8:2, 13:8, 15:13, 22:14 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணி.

சிறந்த கோல் சூட்டராக சுழிபுரம் விக்டோரியா கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஐஸ்வர்யா, சிறந்த மைதானக் காப்பாளராக தெல்லிப்பழை யூனியன் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த யுவன்ஜா, சிறந்த மையப் பிரதேச வீராங்கனையாக சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த தனுஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Related posts: