வலைப்பந்தாட்டத் தொடரில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி சம்பியன்!

கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி தனது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடமராட்சி பாட சாலைகளுக்கு இடையில் நடத்திய வலைப்பந்தாட்டத் தொடரில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி சம் பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.
விக்னேஸ்வராக் கல்லூரி மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணியை எதிர்த்து பருத்தித்துறை வட இந்து மகளிர் கல்லூரி அணி மோதியது. முதல் பாதியாட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி முதல் பாதியின் முடிவில் 11:7 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை வகித்தது. அந்த அணி இரண்டாவது பாதியிலும் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்து முடிவில் 22:14 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது. ஆட்ட நாயகியாக பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணியின் வீராங்கனை கீர்த்திகாஇ சிறந்த மையப் பிரதேச வீராங்கனையாக வட இந்து மகளிர் கல்லூரி அணியின் வீராங்கனை கிரோசிகா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
Related posts:
|
|