வலுவான நிலையில் இலங்கை!

Saturday, May 1st, 2021

இலங்கை மற்றும் சுற்றுலா பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 493 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப் பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி போட்டியின் மூன்றாவது நாளான இன்று 7 விக்கெட்டுக்களை இழந்து 493 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியுள்ளது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 118 ஓட்டங்களையும் மற்றும் லஹிரு திரிமான்ன 140 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

மேலும், ஓசத பெர்ணான்டோ 81 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் டஸ்கின் அஹமட் 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி சற்றுமுன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 37 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது

000

Related posts: