வலுவான நிலையில் இலங்கை அணி!

Wednesday, November 9th, 2016

இலங்கை அணித்தலைவர் ரங்கண ஹேரத் சுழலில் மிரட்ட, ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 272 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனஞ்செய டி சில்வா (127), குணரத்னே (116) ஆகியோரின் அசத்தல் சதத்தால் முதல் இன்னிங்சில் 504 ஓட்டங்களை பெற்றது.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு முன்வரிசை வீரர்கள் பிரைன் ஜரி (80), எர்வின் (64), சீன் வில்லியம்ஸ் (58) ஆகியோர் கைகொடுத்தனர்.

ஆனால் அதன் பிறகு வந்த துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆரம்பித்தனர்.இதனால் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 272 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில், சுழலில் மிரட்டிய அணித்தலைவர் ரங்கண ஹேரத் 5 விக்கெட்டுகளையும், தில்ருவான் பெரேரா 3 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.இதைத் தொடர்ந்து 232 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்த இலங்கை அணி, தற்போது 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: