வருகின்றது ஒலிம்பிக்கில் கிரிக்கெட் !

Saturday, July 2nd, 2016

2016 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் 21ஆ ம் திகதி வரை பிரேசிலில் நடைபெறுகிறது.அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020 ம் ஆண்டு ஜப்பானில் நடைபெறுகிறது.

2024 ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை ரோம் நடத்துமானால் ,அப்போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு இடம் பெறும் என்று  இத்தாலி கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. 2024 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இத்தாலியின் ரோம்,பிரான்ஸ்சின் பாரிஸ்,அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்,மற்றும் ஹங்கேரியின் புடாபெஸ்ட் ஆகிய நகரங்களிடையே கடும் போட்டி நிலவுகின்றன.

இதுதொடர்பாக இத்தாலி கிரிக்கெட் சங்க தலைவர்   சிமோன் கம்பினோ கூறும்போது ரோம் நகரில் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமை பெற்றால் கிரிக்கெட் கட்டாயம் சேர்க்கப்படும் என்றும் இதை பற்றி எங்கள் ஒருங்கிணைப்பு குழு நிலையான முடிவை எடுத்துள்ளது என்றார்.

ஒலிம்பிக் போட்டியின் புதிய விதிமுறை படி விதிமுறைகளுக்குட்பட்டு போட்டியை நடத்தும் நாடு, ஏதேனும் ஐந்து புதிய போட்டிகளை சேர்த்துக் கொள்ளலாம். அதன் காரணமாகவே இத்தாலி கிரிக்கெட் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் எடின் பார்க் நகரில் ஐசிசி ஆண்டு பொதுகுழு கூட்டம் நடைபெற்ற போது கம்பினோ இதனை தெரிவித்தார்.

அப்படி இத்தாலி கிரிக்கெட் போட்டியை நடத்தும் உரிமையை பெறுமானால் போலோக்னா நகரில் கிரிக்கெட் நடத்தப்படும் என்றும், இங்கு உலக லீக் கிரிக்கெட் டிவிஷன் போட்டி கடந்த 2010 ம் ஆண்டு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் 12 அணிகள் இடம் பெறும் என்றும் அவை ஐரோப்பாவில் இருந்து 3 அணிகளும், ஆசியாவில் இருந்து 3 அணிகளும், அமெரிக்காவில் இருந்து 2 அல்லது 3 அணிகள், கரீபியனில் இருந்து 1 அணியும் மற்றும் தெற்கு பசிபிக் பகுதியில் இருந்து 2 அல்லது 3 அணிகள் இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது.தற்போது ஐரோப்பிய யூனியன் பிரேதசத்தில் இருந்து பிரிட்டன் வெளியேரும் நிலையில் உள்ளது. இதனால் இங்கிலாந்து அணி பங்கேற்பது சந்தேகம் தான் என கூறப்படுகிறது.

Related posts: