வரலாற்று சாதனையை தவறவிட்ட யூனிஸ்கான்!

Sunday, January 8th, 2017

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் யூனிஸ்கான் 13 ஓட்டங்களில் 10 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை அடையும் வாய்ப்பை தவறிவிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்தது.இதில் 39 வயதான யூனிஸ்கான் முதல் இன்னிங்சில் 175 ஓட்டங்கள் குவித்தார். இதன் மூலம் அவரது டெஸ்ட் ஓட்டங்களின் எண்ணிக்கை 9,964 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் அவர் 36 ஓட்டங்கள் எடுத்தால் 10 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லையும், இந்த மைல்கல்லை கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் பெறுவார் என இருந்தது.

ஆனால் அவர் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்து இந்த சாதனையை தவறவிட்டார். 10 ஆயிரம் ஓட்டங்களுக்கு அவருக்கு மேலும் 23 ஓட்டங்கள் தேவை.

இந்த நிலையில் அவர் மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம்பெறுவாரா அல்லது ஓய்வு பெறுவாரா? என்பது தெரியவில்லை.

இதுவரை 115 டெஸ்டில் விளையாடியுள்ள யூனிஸ்கான் 9,977 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 34 சதங்களும் அடங்கும்.

07-1436247322-younis-khan

Related posts: