வரலாற்றுத்துவம் மிக்க வடக்கின் பெரும் போர் ஆரம்பம்!
Thursday, March 5th, 2020வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று (05) காலை 10 மணிக்கு ஆரம்பமானது.
நூற்றாண்டு கடந்து 114 ஆவது தடவையாக இடம்பெறும் இந்தத் துடுப்பாட்டப் போட்டி இன்றிலிருந்து எதிர்வரும் 7ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகிறது.
விஜயகாந்த் வியாஸ்கந்த் தலைமையில் யாழ். மத்திய கல்லூரி அணியினரும் நாகேந்திரராஜா சௌமியன் தலைமையில் சென். ஜோன்ஸ் கல்லூரியினரும் போட்டியில் களம் இறங்கியுள்ளனர்.
யாழ். மத்திய கல்லூரி அதிபர் எழில் வேந்தன் மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஞானபொன்ராஜா ஆகியோர் தலைமையில் இன்று காலை யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் வீரர்கள் அறிமுகம் மற்றும் நாணயச்சுழற்சி இடம்பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்திய கல்லூரி அணி தலைவர் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்த நிலையில் போட்டி இடம்பெற்று வருகின்றது
Related posts:
|
|