வரலாற்றில் இடம்பிடித்த தினேஸ் சந்திமால்!

Saturday, November 18th, 2017

இலங்கை அணி மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்றைய தினம் ஆரம்பித்தது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் சந்திமல் முதலில் களதடுப்பை தெரிவு செய்தார். இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமல்லின் இத் தீர்மானம்,1969ஆண்டிற்கு பின்னர் ஈடன் காடன் விளையாட்டரங்களில்  இரண்டாவது முறையாக களத் தடுப்பு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய ஈடன் காடன் விளையாட்டரங்கில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்து வீசுவதற்கு தீர்மானித்த 2 வது தலைவர் தினேஷ் சந்திமல் என பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: