வரலாற்றினை நினைவூட்டிய தினேஷ் சந்திமால் !

Thursday, November 9th, 2017

இந்தியா அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி நேற்று (08) இந்தியா சென்றடைந்துள்ளது.

கடந்த07 அணியின் வீரர்கள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டனர். சமய நிகழ்வுக்கு பின்னர் கருத்து தெரிவித்த இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால்;

35 வருட டெஸ்ட் வரலாற்றை திரும்பி பார்க்கும் போது இதுவரை இலங்கை அணி இந்தியாவில் டெஸ்ட் தொடர் ஒன்றையேனும் கைப்பற்றவில்லை, எனினும் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மனநிலையை வலுப்படுத்த உதவியது..” என குறிப்பிட்டுள்ளார்.

இன்று இந்தியா செல்லவுள்ள இலங்கை அணி அங்கு, மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

Related posts: