வரலாறு படைத்த வங்கதேச அணிக்கு சங்கக்காரா பாராட்டு!

Tuesday, November 1st, 2016

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த வங்கதேச அணிக்கு குமார் சங்கக்காரா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து- வங்கதேசம் அணிகள் மோதிய 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது.இதில் 108 ஓட்டங்களால் வெற்றி பெற்ற வங்கதேசம் முதன் முறையாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. இதனால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 1-1 என கணக்கில் சமன் செய்ததது.

இதனையடுத்து சமீப காலமாகவே அசத்தி வரும் வங்கதேச அணிக்கு ரசிகர்களும், வீரர்களும் வாழ்த்து கூறினர்.இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா தனது டுவிட்டரில் வங்கதேச அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.வியக்க வைக்கும் வேலையை செய்துவிட்டீர்கள். பரபரப்பான வெற்றி இது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இங்கிலாந்து அணிக்கு சாதகமாக ஏதும் அமையவில்லை என்று கூறியுள்ளார்.

Amazing work by @BCBtigers. Sensational win. Congrats to all. @ECB_cricket didn’t look at all comfortable in the conditions.

— Kumar Sangakkara (@KumarSanga2) 30 October 2016

இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினும் வெற்றி பெற்ற வங்கதேச அணிக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

Congratulations @BCBtigers on a great win.A memorable Test win at your favourite venue.

— Ashwin Ravichandran (@ashwinravi99) 30 October 2016

sangakkara

Related posts: