வரலாறு படைத்த ரொனால்டோ:இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட்!

Saturday, December 17th, 2016

உலகக்கிண்ண கால்பந்து போட்டி ஜப்பான் நாட்டில் நடந்து வருகிறது கிளப் அணிகளுக்கான உலகக்கிண்ண கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதில் நேற்று நடந்த 2வது அரையிறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் -கிளப் அமெரிக்கா அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கிளப் அமெரிக்கா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ரியல் மாட்ரிட் அணியின் பெஞ்சிமா 45வது நிமிடத்திலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ கடைசி நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

ரொனால்டோவுக்கு இது 500வது கிளப் கோலாகும். இதன் மூலம் அவர் புதிய வரலாறு படைத்துள்ளார்.

இறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் அணி, கஷிமா அன்ட்லெர்ஸ் அணியை சந்திக்கிறது. இந்தப் போட்டி எதிர்வரும் 18ம் திகதி நடைபெறுகிறது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: