வரலாறு படைத்த ரஃபேல் நடால்!

Tuesday, June 13th, 2017

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் பத்தாவது முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் கடைசி நாளான இன்று ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலும், 3வது இடத்தில் உள்ள சுவிட்ஸர்லாந்து வீரர் வாவ்ரிங்காவும் மோதினார்கள். இறுதிபோட்டியில் சுவிட்ஸர்லாந்து வீரர் வாவ்ரிங்காவை, ரஃபேல் நடால் 6-2, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தியுள்ளார்

சர்வதேச கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் நடால் வென்ற 15 வது பட்டம் இது. மட்டுமின்றி 10வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று நடால் சாதனை படைத்துள்ளார். நடாலுக்கு எதிராக இதுவரை 18 ஆட்டங்களில் மோதி அதில் 3ல் மட்டுமே வாவ்ரிங்கா வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: