வட்டுவாகலில் அதி நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானம்!

Monday, October 30th, 2017

வட்டுவாகல் பகுதியில் அதி நவீன வசதிகளுடன் கூடிய தேசிய விளையாட்டு மைதானம் ஒன்று அமைப்பதற்கு விளையாட்டுத் துறை அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் பிரத்தியேக செயலாளர் சம்பத் திஸநாயக்கா தலைமையிலான விசேட குழுவினர் நேற்று முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கமைய முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிவாய்க்கால்- வட்டுவாகல் பகுதிக்கு சென்ற விசேட குழுவினர் தேசிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பிரதேசத்தை நில அளவீடு செய்துள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவு பிரதேச செயலக விளையாட்டு மைதானமும் மற்றும் புதுக்குடியிருப்பு விளையாட்டு மைதானங்களையும் பார்வையிட்ட குழுவினர் குறித்த விளையாட்டு மைதானங்களையும் புணரமைத்துத் தருவதாகத் தெரிவித்துள்ளனர்

Related posts: