வடமாகாண வல்லவன் தொடர் :பலாலி விண்மீனை வீழ்த்தியது நாவாந்துறை சென்.மேரிஸ் !

வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் வி.க பிரமாண்ட மின்னொளி அமைப்பில் நடத்தும் வடமாகாண வல்லவன் உதைப்பந்தாட்ட சமரில் 07.10.2016 அன்று நடைபெற்ற போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஸ் வி.க எதிர்த்து பலாலி விண்மீன் வி.க மோதியது.
போட்டியின் 4ஆவது நிமிடத்திலேயே விண்மீன் முன்கள வீரர்கள் சென்.மேரிஸ் பின்கள வீரர்களின் ஆட்ட வியூகத்தினை உடைத்து உதயராஜ் மூலமாக முhலாவது கோலினை போட்டு அதிர்ச்சியளித்துள்ளனர். விறுவிறுப்பாக தொடர்ந்த ஆட்டத்தில் 33ஆவது நிமிடத்தில் சென்.மேரிஸ் யூட் பதில் கோலினை அடிக்க முதற்பாதி ஆட்டம் 1:1 என சமநிலையானது.
தொடர்ந்த 2ஆவது பாதியாட்டத்தின் 76ஆவது நிமிடத்தில் சென்.மேரிஸ் மதி தலையால் முட்டி கோலினை பதிவு செய்ததுடன் 87ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற மூலை உதையினை ஜான்சன் கோலாக மாற்ற ஆட்ட நேர முடிவில் 3:1 என சென்.மேரிஸ் வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்ட நாயகனாக சென்.மேரிஸ் மதி தெரிவு செய்யப்பட்டதுடன் அணிக்கான பரிசினை யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியர் சண்முகம் வழங்க வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வு.ஆ மீடின் பதக்கம் அணிவித்து கௌரவித்தார்.
Related posts:
|
|