வடமாகாண மெய்வல்லுநர் போட்டி:  பெண்கள் பிரிவில் கிளி.மாவட்டம் சம்பியன்!

Tuesday, May 29th, 2018

வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடாத்திய மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்கள், பெண்களிற்கான மெய்வல்லுநர் போட்டியில் பெண்கள் பிரிவில் கிளிநொச்சி மாவட்டம் 16 பதக்கங்களைப் பெற்று 1 ஆம் இடத்தை கைப்பற்றியது.

வடமாகாண விளையாட்டு திணைக்களம் நடாத்திய மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்கள் பெண்களிற்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு நேற்று யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கிளிநொச்சி மாவட்டம் 8 தங்கப் பதக்கம், 3 வெள்ளி பதக்கம், 5 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று 1 ஆம் இடத்தையும் முல்லைத்தீவு மாவட்டம் 5 தங்கப்பதக்கம், 7 வெள்ளிப் பதக்கம், 4 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று 2 ஆம் இடத்தையும் மன்னார் மாவட்டம் 4 தங்கப்பதக்கம், 2 வெள்ளி பதக்கம், 4 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று 3 ஆம் இடத்தையும் யாழ் மாவட்டம் 3 தங்கப்பதக்கம், 7 வெள்ளி பதக்கம், 7 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று 4 ஆம் இடத்தையும் வவுனியா மாவட்டம் 2 தங்கப்பதக்கம், 3 வெள்ளி பதக்கம், 2 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று 5 ஆம் இடத்தையும் பெற்றன.

Related posts: