வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் முதலிடம்!

Wednesday, September 14th, 2022

2022 ஆம் ஆண்டுக்கான வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் அணியும் பெண்கள் அணிகள் இரண்டும் வடமாகாணத்தில் முதலிடத்தினை பெற்றுள்ளன.

மாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த 09.09.2022 தொடக்கம் 11.09.2022 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தினை சேர்ந்த 5 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர் யுவதிககள் அணியினர் பங்குகொண்டிருந்தார்கள்.

ஆண்கள்,பெண்கள் அணிகளில் இரண்டு போட்டிகளிலும் முல்லைத்தீவு மாவட்டம் முதலிடத்தினை பெற்று முல்லைத்தீவு மாவட்ட வீரர்கள் தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணியினர் 7 தங்க பதக்கங்களையும், 5 வெள்ளி பதங்கங்களையும், 3 வெங்கல பதக்கங்களையும் பெற்று மாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளார்கள்.

மாகாணத்தில் இரண்டாம் இடத்தினை வவுனியா மாவட்ட அணி 2 தங்கப்பதங்கங்களையும்,3 வெள்ளி பதக்கங்களையும்,1 வெங்கல பதக்கத்தினையும் பெற்று இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்கள்.

யாழ் மாவட்ட அணியினர் 2 தங்கப்பதக்கங்களையும்,2 வெள்ளி பதக்கங்களையும்,1 வெண்கலப்பதங்கத்தினையும் பெற்று மூன்றாம் இடத்தினையும் கிளிநொச்சி மாவட்ட அணியினர் 4ஆம் இடத்தினையும் மன்னார் மாவட்ட அணியினர் 5 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்கள்.

பெண்கள் அணியில் முல்லைத்தீவ மாவட்டம் 3 தங்கப்பதக்கங்களையும்,4 வெள்ளி பதக்கங்களையும் ,2 வெண்கல பதகங்களையும் பெற்று மாகாணத்தில் முதலிடத்தில் பெற்றுள்ளதுடன். வவுனியா மாவட்ட பெண்கள் அணியினர் 2 தங்கப்பதக்கங்களையும் 1வெங்கலப்பதக்கத்தினையும் பெற்று இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்கள்.

யாழ்மாவட்ட பெண்கள் அணியினர் 1 வெள்ளி பதகத்தினை பெற்று 03 ஆம் இடத்தினை பெற்றுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட அணிக்காக முல்லைத்தீவு  கரைச்சிக்குடியிருப்பு, உண்ணாப்பிலவு, இரணைப்பாலை, உடையார்கட்டு, வள்ளிபுனம், முள்ளியவளை, அளம்பில், திம்பிலி, கோவில்குடியிருப்பு,செல்வபுரம் கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த வீர வீராங்கனைகள் மாவட்ட அணி சார்பாக போட்டியில் பங்கு பற்றி முல்லைத்தீவு மாவட்டத்தினை வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் வெற்றிகாக பங்காற்றியிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: