வடமாகாண கபடித் தொடர்: சாவகச்சேரி இந்து சம்பியன்!

Saturday, June 23rd, 2018

வடமாகாணக் கல்வித் திணைக்களம் நடத்திய 17 வயதுக்குட்பட்ட கபடித் தொடரில் ஆண்கள் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி சம்பியனானது.

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி மோதியது. இதில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி 33:28 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது. மூன்றாமிடத்தை கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலய அணி பெற்றது.

Related posts: