வடமராட்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி முடிவுகள்

Monday, March 5th, 2018

வடமராட்சி கல்வி வலயப் போட்டிகள் நேற்றுமுன்தினம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் இடம்பெற்றது.

இப்போட்டிகள் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.செல்வக்குமரன் தலைமையில் இடம்பெற்றன. இப்போட்டிகளின் முடிவுகள் வருமாறு:

20 வயதின் கீழ் (ஆண்கள்)

1 ஆம் இடம் – பரு. யாழ். ஹாட்லிக் கல்லூரி, 2 ஆம் இடம் – யாழ். நெல்லியடி. மத்திய கல்லூரி, 3 ஆம் இடம் யாழ். உடுப்பிட்டி. அமெரிக்க மிஸன் கல்லூரி

20 வயதின் கீழ் (பெண்கள்)

1 ஆம் இடம் – யாழ். பரு. மெதடிஸ் உயர்தரப் பாடசாலை, 2 ஆம் இடம் – யாழ். உடுப்பிட்டி மகளிர் கல்லூரி

17 வயதின் கீழ் (ஆண்கள்) ௲

1 ஆம் இடம் – யாழ்.பரு. ஹாட்லிக் கல்லூரி, 2 ஆம் இடம் – யாழ். நெல்லியடி மத்திய கல்லூரி, 3 ஆம் இடம் – யாழ். குடத்தனை பு.வு.ஆ.ளு (ஜி.ரி.எம்.எஸ்)

17 வயதின் கீழ் (பெண்கள்) ௲

1 ஆம் இடம் – உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, 2 ஆம் இடம் –  யாழ். பரு. மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலை, 3 ஆம் இடம் – யா.பருத்தித்துறை வடஇந்து மகளிர் கல்லூரி

இப் போட்டியின் பிரதம நடுவராக ஆ.கோகுலராஜனும் நடுவர்களாக தி.இராஜசிங்கம், கபில்நாத், செல்வி, செல்வி.நிதர்ஸிகா, செல்வி.மயூரி ஆகியோர் கடமையாற்றினர்.

Related posts: