வடமாகாணத்தைச் சேர்த்த ஆறு கிரிக்கெற் நடுவர்கள் இலங்கை கிரிக்கெற் மத்தியஸ்தர் சபையால் தரமுயர்த்தப்பட்டனர்!
Wednesday, July 26th, 2017யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 6 கிறிக்கெற் மத்தியஸ்தர்கள் இலங்கை கிரிக்கெற் மத்தியஸ்தர் சபையினால் தரம் 5 இல் இருந்து தரம் 4 B இக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெற் கட்டுப்பாட்டுச் சபையின் மத்தியஸ்தர் சங்கத்தினால் நடத்தப்பட்ட தரமுயர்த்தலுக்கான போட்டிப்பரீட்சை கடந்த வருட இறுதியில் நடைபெற்றது.
இதில் நாடுதழுவிய ரீதியில் நூற்றுக்கணக்கான கிரிக்கெற் மத்தியஸ்தர்கள் தோற்றியிருந்த நிலையில் தற்போது அதற்கான புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த பரீட்சையில் வரையறைப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப்பெற்ற நடுவர்கள் தற்போது தரமுயர்த்தல் செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிறப்புப் பெறுபேறுகளை பெற்று ஆறு நடுவர்கள் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் யாழ் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் விளையாட்டுத்துறை அசிரியர் இரவீந்திரன் ஶ்ரீரமணன், பருத்தித்துறை தபாலகத்தின் தபால் சேவை உதவியாளராக பணிபுரியும் தவராஜசிங்கம் கிருபாகரன், விமான உப நிகர எடைக்கட்டப்பாட்டு அலுவலகர் பாலச்சந்திரன் சஞ்சீவ் ,யாழ்ப்பாணம் சுகாதாரத் திணைக்களத்தின் சாரதியாக பணிபுரியும் திருச்செல்வம் துஷானந்த், யாழ் பிரதம அஞ்சல் திணைக்களத்தின் உத்தியோகத்தர் சண்முகசுந்தரம் குணதாஸ் மற்றும் யாழ் பல்கலைக்கழக உத்தியோகத்தர் P. முருகவேல் ஆகியோரே இவ்வாறு தரமுயர்த்தப் பட்டுள்ளனர்.
குறித்த தரமுயர்த்தல் பரீட்சையில் நாடுதழுவிய ரீதியில் பாலச்சந்திரன் சஞ்சீவ் அதிக உச்ச புள்ளிகளாக 95 புள்ளிகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|