வடக்கு – கிழக்கு பிறீமியர் லீக் துரையப்பாவில் ஆரம்பம்!

Thursday, May 31st, 2018

வடக்கு – கிழக்கு பிறிமியர் லீக் கால்ப்பந்தாட்டத் தொடர் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டுமைதானத்தில் பெரும் எடுப்பில் இன்ற ஆரம்பமாகியுள்ளது.

இந்தியன் பிறிமியர் லீக் பாணியில் (ஐ.பி.எல்) 12 அணிகள் உருவாக்கப்பட்டு அதற்கான வீரர்களின் தெரிவு கடந்த வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற அணிகள் கட்டமைக்கப்பட்டன.

தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்ட வந்ததன் அடிப்படையில் இந்நத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஆட்டங்கள் அனைத்தும் மின்னெளியில் நடைபெறவுள்ளன.

இந்நத் தொடர் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு வடக்கு – கிழக்க பிறிமியர் லீக்கின் தலைவர் எஸ்.விமலதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் இலங்கை கால்ப்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அனுரடிசில்வா, அணியின் உரிமையாளர்கள், வடக்கு – கிழக்கு பிறிமியர் லீக்கின் நிர்வாகிகள் கலந்த கொண்டனர்.

இந்தத் தொடரில் கிளியூர்கிங்ஸ் அணி (கிளிநொச்சி மாவட்டம்), தமிழ யுனைற்றெட் அணி (யாழ்ப்பாணம்) , ரில்கோ கொங்கியூரெர்ஸ்ட்எப்.சி (யாழ்ப்பாணம்), மன்னார் எப்.சி (மன்னார் மாவட்டம்), ரிங்கோ ரைய்ரென்ஸ் (திருகோணமலை மாவட்டம்), வவுனியா வாரியர்ஸ் (வவுனியா மாவட்டம்), நேபதன் எலைய்ட் எப் (யாழ்ப்பாண மாவட்டம்), முல்லை பீனிக்ஸ் (முல்லைத்தீலு மாவட்டம்), வல்வைஎப்.சி (யாழ்ப்பாணம் மாவட்டம்), மட்டு நகர் சுப்பர் கிங்ஸ் (மட்டக்களப்பு மாவட்டம்) ஆகிய 12 அணிகள் மோதவுள்ளன.

தொடருக்கான கிண்ணம் தொடரில் கலந்த கொள்ளும் அணிகளின் மாவட்டங்கள் மற்றும் இடங்களுக்கம் கொண்ட செல்லப்பட்ட இன்ற யாழ்ப்பாண மாவட்டத்தை வந்தடையும். அதைத்தொடர்ந்த ஆட்டங்கள் ஆரம்பமாகும்.

Related posts: