வடக்குத் தடகளத்தில் 80 பேருக்கு உபாதை!

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடரில் சுமார் 80 வீர, வீராங்கனைகள் உபாதைக்கு உள்ளாகினர் என்று தெரியவருகிறது. வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலா தடகளத் தொடர் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் நேற்று வரை நடைபெற்றது. சுமார் 80 வீர வீராங்கனைகள் உபாதைக்கு உள்ளாகினர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இயன் மருத்துவர் ரி.சஞ்சீவன் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்:
‘‘வீரர்கள் பலர் தசைபிடிப்பு, மயக்கம், மூச்சுத் திணறல் போன்ற விபத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதற்குக் காரணம் அவர்கள் பயிற்சியின் போதும் விளையாட்டில் பங்கு பற்றும் போதும் சரியான உஸ்ணப்படுத்தும் முறையைக் கடைப்பிடிக்காமை முக்கிய காரணமாக அமைகிறது. பயிற்சியில் ஈடுபடும் போது போதிய உடற்பயிற்சி செய்த பின்னரே போட்டிகளில் பங்குபற்ற வேண்டும். அதேபோல் போட்டி நடைபெறுவதற்கு முன்னர் குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும்.
அத்தோடு போட்டியில் பங்குபற்றும் வீரர்கள் தமது போட்டி தொடர்பாக முன்கூட்டியே பயிற்சி எடுப்பது சிறந்தது. அதாவது நெடுந்தூர வீரர்கள் குறிப்பிட்ட தூரத்தை ஓடி பயிற்சி எடுத்திருக்க வேண்டும். இவ்வாறான பயிற்சிகள் இல்லாமல் களமிறங்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளே உபாதைக்கு உள்ளாகியமை அதிகம்’’ என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|