வடக்கின் போர் : கிருபாகரன் அபார சதம்! வலுவான நிலையில் யாழ் மத்தியகல்லூரி

Saturday, March 12th, 2016
வடக்கின் போர் கிரிக்கெற் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் தனது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய யாழ் மத்திய கல்லூரி அணி  கிருபாகரனின் அபார சதத்தின் மூலம் 94 பந்துப்பரிமாற்றங்களுக்கு முகங்கொடுத்து அனைத்து இலக்குகளை இழந்து 264 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமான மூன்றாம் நாள் போட்டில் நேற்று ஆட்டமிழக்காதிருந்த கிருபாகரனின் இன்றும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 103 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
முன்னதாக தனது முதலாவது இனிங்ஸில் யாழ் மத்திய கல்லூரி அணி 161 ஓட்டங்களையும் சென் ஜோன்ஸ் கல்லூரி 164 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.
தற்போது 261 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிவரும் சென் ஜோன் கல்லூரி அணி 11 பந்துப்பரிமாற்றம் முடிவில் இலக்குகள் இழப்பின்றி 21 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடிவருகின்றது.

Related posts: