வடக்கின் போர் ஆரம்பம்!

Thursday, March 8th, 2018

வடக்கின் போர் என்று வர்ணிக்கப்படும் யாழ்.மதிய கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையிலான 112 ஆவது துடுப்பாட்டப் போட்டி இன்று யாழ் .மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இப்போட்டி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறவுள்ளது இரு அணிகளும் இதுவரை மோதிய 111 போட்டிகளில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 36 போட்டிகளிலும் ,யாழ் மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றி பெற்றன 40 போட்டிகள் சம நிலையில் நிறைவடைந்துள்ளன .

7 போட்டிகளுக்கு முடிவு பெறப்படவில்லை. ஒரு போட்டி கைவிடப்பட்டது கடந்த ஆண்டு இடம் பெற்ற வடக்கின் போரில் சென். ஜோன்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றது. யாழ் மத்திய கல்லூரி இறுதியாக 2011 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற நிலையிலுள்ளது.

இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கட் சங்கத்தின் போட்டித் தொடரில் சென். ஜோன்ஸ் கல்லூரி பிரிவு 2 இலும் யாழ் .மத்திய கல்லூரி பிரிவு 3 இலும் விளையாடி வருகின்றன.

கடந்த ஆண்டில் இரு அணிகளும் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. பந்து வீச்சைப் பொறுத்த வரையில் போட்டிகளின் போக்கினை மாற்றக் கூடிய வல்லமை உள்ள வீரர்கள் இரு பாடசாலைகளிலும் காணப்படுவதால் போட்டிகள் விறு விறுப்பாக அமையும் என இரு கல்லூரிகளின் ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.

வழமை போன்று போட்டிக்கான சகல ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் அமையப் பெற்றுள்ளதால் போட்டியைப் பார்வையிடும் ரசிகர்கள் எவ்வித குழப்பமும் இன்றி கண்டு களிக்கக் கூடியதாக இருக்கும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்

Related posts: