வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு அபராதம்!

Thursday, December 1st, 2016

தாம் தங்கியிருந்த விடுதிக்கு மறைமுகமாக பெண்ணொருவரை அழைத்து வந்த குற்றம் தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்கள் இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சப்பீர் ரஹ்மான் மற்றும் அல்-அமீன் ஹொசைன் ஆகிய வீரர்களுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகள் இடம்பெற்ற போது குறித்த வீரர்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் இவ்வாறு பெண்களை அவர்களின் அறைக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் ,  ஒழுக்காற்றை மீறிய குற்றத்திற்காக ஒருவருக்கு தலா 15,000 அமெரிக்க டொலர்கள் வீதம் அபராத தொகையினை விதிக்க அந்நாட்டு கிரிக்கட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

3-63

Related posts: