வங்கதேச அணித் தலைவராக மீண்டும் சகீப் அல் ஹசன்!

Wednesday, February 28th, 2018

இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண முக்கோண தொடரில் பங்குகொள்ளும் பங்களாதேஸ் அணியின் தலைவராக மீண்டும் சகீப் அல் ஹசன் (shakib al hasan) செயற்படவுள்ளார்.

பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன்  இதனைத் தெரிவித்துள்ளார்.

காயம் காரணமாக பங்களாதேஸில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டித் தொடரில் சஹீப் அல் ஹசன் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.இதனிடையே, பங்களாதேஸ் அணியிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வேகப்பந்து வீச்சாளர் டஸ்கின் அஹமட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹீடி ஹசன் மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு இருபது சுதந்திர கிண்ண போட்டித் தொடரில் இலங்கை அணியுடன் இந்திய மற்றும் பங்களாதேஸ் அணிகள் பங்குகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: