வங்கதேச அணித்தலைவர் மருத்துவமனையில் அனுமதி!

Tuesday, January 17th, 2017

பந்து தலையில் தாக்கியதால் வங்கதேசம் கிரிக்கெட் அணியின் தலைவர் முஷ்பிகுர் ரஹிம் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிங்டனில் இடம்பெற்ற நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தின் போதே காயம் ஏற்பட்டுள்ளது.

துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த முஷ்பிகுர் ரஹிம் 13 ஓட்டங்களை பெற்றிருந்த போது, நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி வீசிய பந்து அவரது தலையை தாக்கியது.

இதனை அடுத்து முஷ்பிகுர் ரஹிம்மிற்கு அவரச முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும் அவர் மேலதிக சிகிச்கைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு பாரதூரமானமாக இல்லை என முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்தாகவும், முன்னெச்சரிக்கைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.

WELLINGTON, NEW ZEALAND - JANUARY 16:  Mushfiqur Rahim of Bangladesh is stretchered into an ambulance after being struck in the helmet by a delivery from Tim Southee of New Zealand during day five of the First Test match between New Zealand and Bangladesh at Basin Reserve on January 16, 2017 in Wellington, New Zealand.  (Photo by Hagen Hopkins/Getty Images)

Related posts: