வங்கதேசத்தை சுருட்டிய இலங்கை!

இலங்கை-வங்கதேம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 7ம் திகதி காலி மைதானத்தில் தொடங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 494 ஓட்டங்கள் குவித்தது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய வங்கதேச அணி முதல் இன்னங்சில் 312 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வங்கதேசம் அணி சார்பில் அணித்தலைவர் முஷ்பிகூர் ரஹீம் 85 ஓட்டங்களையும், சௌம்யா சர்க்கார் 71 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் பெரேரா, அணித்தலைவர் ஹேரத் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
182 ஓட்டங்கள் முன்னிலையுடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியிருந்த நிலையில் போட்டியில் மழை குறுக்கிட்டது.
இந்நிலையில், இலங்கை-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மழைக்காரணமாக இடைநிறுத்தப்பட்டது.
பின்னர், இன்றைய ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்த நடுவர்கள், போட்டி நாளை காலை வழக்கம் போல் தொடங்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
|
|