வங்கதேசத்தை ஒரே நாளில் வதைத்த தென் ஆப்பிரிக்கா!
Sunday, October 8th, 2017வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாளில் 3 விக்கெட் இழப்பிற்கு 428 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, அங்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று போலும் பாண்டெய்னில் நடைபெற்றது.
தன் படி நாணய சுழற்சியில் வென்ற வங்கதேச அணி, பீல்டிங்கை தெரிவு செய்து முதல் தவறை செய்தது.ஏனெனில் பிட்ச் ஒன்றும் அந்த அளவிற்கு இல்லை, முதலில் துடுப்பெடுத்து ஆடும் அணி, நல்ல ஓட்டங்களை குவிக்கலாம் என்று கூறப்பட்ட போதும், முஸ்தபிகுர் பிட்சை தவறாக கணித்துவிட்டார்.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க வீரர்களான டேயன் எல்கர், மற்றும் ஏய்டன் மார்க்ரம் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.இவர்கள் இருவரும் டெஸ்ட் போட்டி போன்று ஆடாமல், ஒருநாள் போட்டி போன்று வங்கதேச அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணியின் ரன் விகிதம் மளமளவென எகிறியது. பந்து வீச்சாளர்களை தொடர்ந்து மாற்றிய போதும் பலன் அளிக்கவில்லை, ஒருவழியாக எல்கர் சதம் கடந்து 113 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த ஆம்லாவும் துவக்கத்திலே அதிரடியை காட்டினார்.ஒரு புறம் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஏய்டன் மார்க்ரம் 143 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
ஷஇறுதியாக தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 428 ஓட்டங்கள் எடுத்தது. ஒரே நாளில் 428 ஓட்டங்கள் குவித்து தென் ஆப்பிரிக்கா அசத்தியது.நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடாமல் பந்து வீச்சை முடிவு செய்த முஷ்பிகுர் ரஹிம்மின் முடிவை கிண்டல் செய்யும் விதமாக டுபிளெசிஸ், முதலில் துடுப்பெடுத்து ஆட முடியாத அளவிற்கு இந்தப் பிட்சில் ஒன்றுமில்லை என்பது போல் செய்தார்.
Related posts:
|
|