லா லிகா தொடர்: பார்சிலோனாவின் சாதனையை சமப்படுத்தியது றியல் மட்ரிட்!

Tuesday, September 20th, 2016

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகாதொடரின் ஸ்பன்யோல் அணியுடனான போட்டியில் வெற்றி பெற்ற றியல் மட்ரிட், சாதனை படைத்துள்ளது.

2010-11ஆம் ஆண்டு பருவகாலத்தில், பெப் குவார்டிலோவின் முகாமைத்துவத்திலிருந்த பார்சிலோனா அணி, லா லிகாவில் தொடர்ச்சியாக 16 வெற்றிகளைப் பெற்றிருந்த நிலையில், தற்போது குறித்த சாதனையை றியல் மட்ரிட் சமப்படுத்தியுள்ளது.

இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கரித் பேலும் காய்ச்சல் காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத நிலையிலேயே இப்போட்டியில் றியல் மட்ரிட் வெற்றி பெற்றிருந்தது.

டொனி க்ரூஸிடமிருந்து 30 அடி தூரத்தில் பந்தைப் பெற்ற ஜேம்ஸ் றொட்ரிகாஸ், இரண்டு வீரர்களின் சவால்களை எதிர்கொண்டு, முதற்பாதியின் முடிவில் கோலொன்றினைப் பெற்று றியல் மட்ரிட்டுக்கு முன்னிலை வழங்கியதுடன், லூகாஸ் வஸ்கூஸிடமிருந்து நெருங்கிய தூரத்தில் பந்தைப் பெற்ற கரிம் பென்ஸீமா, போட்டியின் 71ஆவது நிமிடத்தில் பெற்ற கோலுடன், 2-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன், இப்பருவகாலத்தில், விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்ற றியல் மட்ரிட், 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஒன்பது புள்ளிகளுடன் பார்சிலோனா, இரண்டாமிடத்தில் உள்ளது.

Ronaldo2(1)

Related posts: