லா லிகா தொடர்: பார்சிலோனா வெற்றி!

Monday, October 31st, 2016

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று முன்தினம் (29), இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், பார்சிலோனா, அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

றியல் மட்ரிட், அலவேஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வெற்றி பெற்றது. றியல் மட்ரிட் சார்பாக, அவ்வணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஒரு பெனால்டி உள்ளடங்கலாக மூன்று கோல்களையும் அல்வரோ மொராட்டா ஒரு கோலினையும் பெற்றிருந்தனர். எவ்வாறெனினும், ஒரு பெனால்டியினை ரொனால்டோ தவறவிட்டிருந்தார்.

பார்சிலோனா, கிரனெடா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வெற்றி பெற்றது. நேமர் அடித்த பந்தொன்று, கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பி வரும்போது, றபின்ஹா அதைக் கோலாக்கியிருந்தார்.

அத்லெட்டிகோ மட்ரிட், மலாகா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-2 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வெற்றிபெற்றது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக, யனிக் கராஸ்கோ, கெவின் கமெய்ரோ ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றனர்.

இப்போட்டிகளின் முடிவில், 24 புள்ளிகளுடன் றியல் மட்ரிட் முதலிடத்தில் உள்ளதோடு, இரண்டு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ள பார்சிலோனா இரண்டாமிடத்தில் உள்ளதோடு, 21 புள்ளிகளுடன் உள்ள அத்லெட்டிகோ மட்ரிட், மூன்றாமிடத்தில் உள்ளது.

article_1477838250-PL-(1)

Related posts: