லயோனல் மெஸ்ஸி அதிரடி!

Sunday, June 17th, 2018

அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி தனது ஓய்வு முடிவு குறித்து தெரிவித்துள்ளார்.

அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி இந்த உலகக் கிண்ண தொடரில் ஆடுவதை பொறுத்தே கால்பந்தில் தனது எதிர்காலம் அமையும் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில் ‘இந்த 4 ஆண்டுகளில் அணி தெரிவில் சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும்இ ரஷ்ய உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெறவும் போராடினோம். ஈக்வடாருக்கு எதிராக கடைசி போட்டியில் குவிட்டோவில் தான் இது சாத்தியமாயிற்று.

நன்றாக தயாரித்துள்ளோம். இந்த வாரம் முழுவதும் நல்ல தயாரிப்பு. எங்களிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆட்டத்திலும் சவால் அளிப்போம். இதுதான் என் கடைசி உலகக் கிண்ண தொடரா என்று கேட்கின்றனர். ஆனால்இ அது எந்த உலகக் கிண்ண தொடரில் நாங்கள் எவ்வளவு தூரம் வரை செல்கிறோம் என்பதை பொறுத்தது.

சிறந்த கால்பந்து வீரர் விருதுகள் 5 பெற்றுள்ளேன். ஆனால்இ ஒரு உலகக் கிண்ண சாம்பியன் பட்டத்துக்காக அதனை துறக்கவும் தயாராக இருக்கிறேன்.

அந்த விருதுகளுக்கு மதிப்பு இல்லை என்று கூறவில்லை. தனிநபரை விட அணிதான் முக்கியம். நாடுதான் முக்கியம். ரஷ்யா உலகக் கிண்ண தொடருக்கு பின்னால் செல்வேன்.

உலகக் கிண்ண தொடர் தான் எந்த ஒரு வீரருக்கும் சிறந்தது. இதுதான் உலகக் கிண்ண தொடரை வெல்ல எனக்கு உத்வேகம் அளித்து வருகிறது’ என தெரிவித்துள்ளார்

Related posts: