லசித் மாலிங்கவுக்கு கௌரவ விருது!

1-120 Friday, April 21st, 2017

 

மும்பை இந்தியன்ஸ் அணியின் 10 அண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட நிகழ்வு அண்மையில் வெகுவிமர்சையாக இடம் பெற்றிருந்தது.

இதில் அந்த அணியின் முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது இந்தியன் பிரிமியர் லீக் தொடர் (IPL) ஆரம்பத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் விளையாடிய 3 வீரர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.இதில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவும் உள்ளடங்கியுள்ளமை விசேடமானது.ஏனைய இரு வீரர்கள் சச்சின் டெண்டுல்கார் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகும்.