லசித் மலிங்கா தான் உலகிலேயே நம்பர் 1!

Thursday, June 27th, 2019

ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2010-ல் இருந்து நடந்த போட்டிகளில் அதிக யார்க்கர் பந்துகளை வீசிய பந்துவீச்சாளர் என்ற பெருமையை லசித் மலிங்கா பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சில் பல்வேறு சாதனைகளை படைக்கும் பல பந்து வீச்சாளர்கள் உலகளவில் உள்ளனர்.

வேகப்பந்து வீச்சில் மிக சிறப்பான அம்சமாக கருதப்படுவது யார்க்கர் பந்துகள் தான்.

அந்த வகையில் கடந்த 2010-ல் இருந்து தற்போது வரை அதிக யார்க்கரை ஒருநாள் போட்டிகளில் வீசியவர் என்ற சாதனையை படைத்துள்ளார் இலங்கையின் லசித் மலிங்கா.

அவர் இந்த காலக்கட்டத்தில் 872 முறை யார்க்கர் பந்துகளை வீசி எதிரணி துடுப்பாட்ட வீரர்களை திணறடித்துள்ளார்.

இந்த பட்டியலில் அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் இரண்டாவது இடத்திலும் (330), நியூசிலாந்தின் டிம் சவுதி மூன்றாவது இடத்திலும் (328) உள்ளனர்.

Related posts: