லசித் மலிங்கவின் சர்வதேச கிரிக்கட் கேள்விக்குறி!

Thursday, May 3rd, 2018

இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் சர்வதேச கிரிக்கட் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.34 வயதான அவரை நீண்டகாலமாக சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இணைக்கவில்லை.

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்படும் தாம், அந்த தொடர் முடியும் வரை உள்ளூர் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்றுஅறிவித்திருந்தார்.

ஆனால் அவர் போதுமான அளவு உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றால் மீளவும் சர்வதேச போட்டிகளில் இணைக்க முடியும் என்று சிறிலங்கா கிரிக்கட்டின் தலைவர் வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் இலங்கை கிரிக்கட் அணியில் மீண்டும் லசித் மலிங்க விளையாடுவது ஐயத்துக்குரிய விடயம் என்று சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Related posts: