லங்கா பிறீமியன் லீக்: கிண்ணத்தை வென்றது யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் !

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொட ரில் காலி கிளாடியேற்றர்ஸ் அணியை வீழ்த்தி யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.
யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணியும் காலி கிளாடியேற்றர்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.
ஹம்பாந்தோட்டை சூரியவௌ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் அவிஸ்க பெர்ணாண்டோ-27, ஜோன்சன் சார்லஸ் -26, அசலங்க-10, சொப்ஃப் மலிக் 46, சனஞ்சய சில்வா 33, திசர பெரேரா 39 ஓட்டங்களை பெற்றனர்.
பந்துவீச்சில் காலி கிளாடியேற்றர்ஸ் அணி சார்பில் தனஞ்சய லன்ஷன் 3, அமீர், ஆராய்ச்சிகே தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
189 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காலி கிளாடியேற்றர்ஸ் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான குணதிலக, சசாய், அசான் அலி ஆகியோர் ஒற்றை ஓட்டத்துடன் வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய ராஜபக்ச 40, ஜெயசூரியா 15, அசாம்ஹான் 36 பெற்றனர். இறுதிவரை போராடிய ஆரய்ச்சிகே சண்டகன் ஓட்டங்களை பெற்றனர்.
பந்துவீச்சில் ஜப்ஃனா சார்பில் ஜேம்ஸ் சின்வாரி-2,மலிக்-2, டி சில்வா, லக்மல், ஹசரங்க, ஒலிவர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்
Related posts:
|
|