லங்கா பிரீமியர் லீக் 2020 – முதல் போட்டியில் கொழும்பு அணி வெற்றி!

Friday, November 27th, 2020

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று ஆரம்பமாகிய நிலையில் முதல் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

இதன் முதல் போட்டியில் அன்ஜலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணியும் குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணியும் போட்டியிட்டன.

இந்தப் போட்டி, ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவுசெய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி டர்கர்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில் கண்டி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களைக் குவித்தது. அணி சார்பாக, ஆரம்பத்தில் களமிறங்கிய குசல் பெரேரா 87 ஒட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததுடன் ரஹ்மனுல்லா கேர்பஸ் 53 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், குசல் மென்டிஸ் 30 ஓட்டங்களையும் குணரத்ன ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், கோனி, சமீர மற்றும் ஹைஸ் அஹமட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், 220 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி 20 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையை அடைந்தது. அணிசார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டினேஸ் சன்டிமால் 80 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளையும், அசேல குணரத்ன மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கைட்டைக் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வெற்றியைத் தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றியை சுவீகரித்தது. போட்டியின் ஆட்டநாயகனாக டினேஸ் சன்டிமல் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை, நாளை நடைபெறவுள்ள எல்.பி.எல். தொடரின் இரண்டாவது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணியும் காலி கிளாடியேடர்ஸ் அணியும் மோதவுள்ளன.

Related posts: