ரோஹித் ஷர்மா இலங்கை ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி!

Monday, March 19th, 2018

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் ஷர்மா இலங்கை ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவே அவர் இவ்வவாறு சென்று அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.

இதுபற்றி தெரியவருவதாவதுஇ

இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதமளவில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியை பார்வையிட இலங்கை ரசிகர் மொஹமட் நிலாம் சென்றிருந்தார். இந்த நிலையில் நிலாமின் தந்தை சுகவீனமடைந்தார்.

இதன்போது திடீரென விமான பயண நாளை மாற்றுவதற்காக தேவைப்பட்ட பணத்தை இந்திய வீரர் ரோஷித் ஷர்மா நிலாமுக்கு வழங்கியியதுடன்

அடுத்த முறை இலங்கை வரும் போது நிலாமின் வீட்டிற்கு வந்து தந்தையை பார்ப்பதாக வாக்குறுதியும் வழங்கியுள்ளார்.

இதற்கமையஇ ரோஹித் ஷர்மா நேற்று முன்தினம் நிலாமின் வீட்டிற்கு சென்றுள்ளதுடன் அதுகுறித்து கருத்தும் தெரிவித்துள்ளார்.

“பல வருடங்களாக எனக்கு நிலாமை தெரியும். என்னை பல வருடங்களாக உற்சாகப்படுத்துகின்றார். கடந்த டிசம்பர் மாதம் தனது தந்தை சுகயீனமடைந்ததனை கூறி நிலாம் என்னிடம் அழுத காட்சி இன்னமும் எனக்கு நினைவில் உள்ளது. அப்போது அவருக்கு  வாக்குறுதி ஒன்றை வழங்கினேன். இலங்கை வரும் போது வீட்டிற்கு வருவேன் என கூறினேன். இன்று எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்றார் அவர்.

“ரோஹித் ஷர்மா என்பவர் சுத்தமான மனதை கொண்ட ஒருவர். அன்று எனது குடும்பத்திடம் இருந்து தந்தைக்கு முடியவில்லை என அழைப்பு கிடைத்தது. உண்மையாக என்னிடம் பணம் இருக்கவில்லைஇ எனினும் இன்னும் ஒருவரின் உதவியுடன் ரோஹித் ஷர்மாவுக்கு தகவல் கிடைத்து எனக்கு அவர் உதவினார். இந்திய அணியில் அனைவரும் எனக்கு நன்கு பழக்கம். எனினும் ரோஹித் அனைவரையும் விட ஒரு படி மேலானவர்” என்றார் நிலாம். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய கருத்து ஒன்றிலேயே இருவரும் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளைஇ இலங்கையில் நடைபெற்று வரும் சுதந்திர கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் கலந்து கொண்டுள்ள இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: