ரோஹித் சர்மா எதிர்காலத்தில் டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை – பிசிசிஐ வட்டாரங்கள் தகவல்!
Thursday, November 23rd, 2023இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா எதிர்காலத்தில் டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் தலைவர் ரோஹித் சர்மா இனி டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடாதிருக்க பிசிசிஐ உடன் ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.
50 ஓவர் உலகக் கிண்ண தொடங்குவதற்கு முன்பு தனது எதிர்காலம் குறித்து பிசிசிஐ உடன் ரோஹித் சர்மா ஆலாசனை நடத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியா அணி அரையிறுதியில் வெளியேறியதிலிருந்து ரோஹித் சர்மா ஒரு டி2 ஆட்டத்தில் கூட விளையாடவில்லை. ஹர்திக் பாண்டியா டி20 அணி அணியை வழிநடத்தியுள்ளார்.
36 வயதான இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், நான்கு சதங்களுடன் கிட்டத்தட்ட 140 ஸ்ட்ரைக் ரேட்டில் 3853 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|