ரோயல் செலஞ்சர்ஸ் அபார வெற்றி!

Tuesday, May 15th, 2018

11வது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்று இடம்பெற்ற 48வது போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 10 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியுடன் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 15.1 ஓவர்களில் 88 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

பதிலளித்த ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி, 8.1 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

இதனிடையே, இன்றைய தினம் கொல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி கொல்கட்டாவில் இடம்பெறவுள்ளது.

Related posts: