ரோமனின் வரலாற்றை மாற்றியமைக்கவுள்ள சூரியக் கடிகாரம் !

இத்தாலியின் மத்திய பகுதியில் இருந்து பண்டைய கால சூரியக் கடிகாரம் (Sun Dial) ஒன்றினை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அரை வட்ட வடிவில் இருக்கும் இக் கடிகாரத்தில் நேரத்தினை கணிப்பதற்கான கோடுகள் தெளிவாக காட்டப்பட்டுள்ளன. இந்த ஆதாரத்தின் ஊடாக வாய்வழி மூலமாக உருவாக்கப்பட்ட உரோம் நகரத்தின் வரலாற்றில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 2010ம் ஆண்டு முதல் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இத்தாலியின் மத்திய பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களே இந்த சூரிய கடிகாரத்தினை கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை - இந்திய ஒருநாள் தொடரில் 3 பிரபல வீரர்கள் நீக்கம்!
முழுத் திறமையையும் வெளிப்படுத்துவேன் - முஹமட் சிராஷ் !
மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!
|
|