ரொனால்டோ ஹற்றிக் கோல் ரியல் மட்ரிட் அசத்தல் வெற்றி!

Tuesday, November 1st, 2016

லா லிகா தொடரில் ரொனால்டோவின் ஹற்றிக் கோல்களின் உதவியுடன் டிப்போர்ரிவோ அணியை வீழ்த்தியது ரியல் மட்ரிட் அணி. ஸ்பெயின் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையில் நடைபெறும் இந்தத் தொடர் மிகவும் பழமையானது. நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆட்டமொன்றில் ரியல் மட்ரிட் அணியை எதிர்த்து டிப்போர்ரிவோ அணி மோதியது.

ஆட்டத்தின் ஆரம்பம் என்னவோ டிப்போர்ரிவோவுக்கு சாதகமாகவெ அமைந்தது. 7ஆவது நிமிடத்தில் டிவ்சன் முதல் கோலைப் பதிவு செய்தார். 17ஆவது நிமிடத்தில் மட்ரிட்டின் முதல் கொலைப் பதிவு செய்த பதிலடி கொடுத்தார் ரொனால்டோ. 33ஆவது நிமிடத்தில் அவர் பிரிதொரு கோலைப் பதிவுசெய்ய 2:1 என்ற கோல் கணக்கில் மட்ரிட்டின் ஆதிக்கத்துடன் முடிந்தது முதல்பாதி.

2ஆம் பாதியில் 84ஆவது நிமிடத்தில் அல்வாரோ, மட்ரிட்டின் 3ஆவது கோலைப் பதிவுசெய்தார். அடுத்த சில நிமிடங்களில் தனது ஹற்றிக் கோலைப் பதிவு செய்தார் ரொனால்டோ. முடிவில் 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது ரியல் மட்ரிட்.

Cristiano-Ronaldo-2_mini

Related posts: