ரொனால்டோ மீது அதிரடி குற்றச்சாட்டு!
Friday, December 9th, 2016
உதைபந்தாட்ட உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் ரொனால்டோ வரி ஏய்ப்பு செய்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஸ்பெயினின் El Confidencial என்ற செய்தித்தாள் வெளியிட்ட செய்தியில், முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் வீரரான ரொனால்டோ வரி ஏய்ப்பு செய்து அதன் மூலம் கோடி கணக்கில் சொத்துக்களை சேர்த்து பயனடைந்துள்ளதாக கால்பந்து கசிவு வலைத்தள ஆவணங்கள் வழியாக தெரியவந்துள்ளது என வெளியிட்டிருந்தது.
மேலும், இதில் மான்செஸ்டர் யுனைடெட் பயிற்சியாளர் Jose Mourinhoவுக்கும் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விளையாடி வரும் ரியல் மாட்ரிட் கிளப் அணி அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சமீபத்தில் ஸ்பானிஷ் வரி நிறுவனம் வெளியிட்ட சான்றிதழில், எங்கள் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போதைய தேதி வரை அனைத்து வரி கடமைகளை செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
இதனால், இதுபோன்ற ஒரு வீரருக்கு அதிகபட்ச மரியாதை அளிக்க வேண்டும் என ரியல் மாட்ரிட் கிளப் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், அவர் நடத்தையில் அனைத்து வீரர்களுக்கும் ஒரு உதரணமாக திகழ்பவர் என புகழாரம் சூட்டியுள்ளது.
Related posts:
|
|